செய்திகள்
தக்காளி

வெங்காயத்தை தொடர்ந்து தக்காளி விலையும் உயர்வு

Published On 2019-11-04 10:07 GMT   |   Update On 2019-11-04 10:07 GMT
வெங்காயத்தை தொடர்ந்து தக்காளி மற்றும் காய்கறிகளின் விலையும் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தென்னை, வாழை, தக்காளி மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த காய்கறிகள் வத்தலக்குண்டு-மதுரை சாலையில் உள்ள கமி‌ஷன் கடைகளுக்கு கொண்டு வரப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தமிழகத்துக்கு வெங்காய வரத்து குறைந்து போனது. இதனால் பல்லாரி வெங்காயம் ஒரு கிலோ ரூ.75 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் வத்தலக்குண்டு பகுதியில் கன மழை காரணமாக தக்காளி அழுக தொடங்கியது.

எனவே கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது ரூ.50 வரை விலை உயர்ந்துள்ளது. மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலை தொடர்ந்தால் தக்காளி, வெங்காயம் மட்டுமின்றி பெரும்பாலான காய்கறிகளும் விலை உயர்ந்து வருவதால் சாமானிய மக்கள் அதனை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மழை பெய்தபோதும் விரும்பிய காய்கறிகளை வாங்கி மக்கள் உண்ண முடியாமல் தவித்து வருகின்றனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதே நிலை காணப்படுகிறது.

Tags:    

Similar News