செய்திகள்
நெதர்லாந்தின் ராணி மேக்சிமா

நெதர்லாந்து ராணி பாகிஸ்தான் வருகை

Published On 2019-11-18 06:09 GMT   |   Update On 2019-11-18 06:09 GMT
நெதர்லாந்தின் ராணி மேக்சிமா நவம்பர் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இஸ்லாமாபாத்:

நெதர்லாந்து ராணி மேக்சிமா பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளரின் சிறப்பு வழக்கறிஞராக அவர் வருகை தரவுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையில், ‘நவம்பர் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராணி மேக்சிமா, பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி, அதிபர் இம்ரான் கான் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்துவார். நாட்டின் உள்ளடக்கிய நிதி மேம்பாடு குறித்து ஆலோசனை நடத்த உள்ள அவர், தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவன தலைவர்களையும் சந்தித்து பேசுவார்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்பு ராணி மேக்சிமா கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News