உள்ளூர் செய்திகள்
கட்டுப்படுத்தப்பட்ட தெருக்கள்

சென்னையில் கொரோனாவால் கட்டுப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 521ஆக உயர்வு

Published On 2022-01-13 08:00 GMT   |   Update On 2022-01-13 08:00 GMT
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தேனாம்பேட்டையில் தான் கட்டுப்படுத்தப்பட்ட தெருக்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 17,934 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் சென்னையில் பாதிப்பு 7,372 ஆக இருந்தது.

சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சென்னை மாநகராட்சி தெருக்களில் தடைகளை வைத்து கட்டுப்படுத்தி வருகிறது. ஒரு தெருவில் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தால் அந்த தெரு கட்டுப்படுத்தப்பட்ட தெருவாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 521 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தேனாம்பேட்டையில் தான் கட்டுப்படுத்தப்பட்ட தெருக்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அங்கு 145 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கு அடுத்தப்படியாக ராயபுரம் மண்டலத்தில் 83 தெருக்களும், அடையார் மண்டலத்தில் 68 தெருக்களும், கோடம்பாக்கத்தில் 52 தெருக்களும், அண்ணாநகர் மண்டலத்தில் 41 தெருக்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 2 தினங்களில் கட்டுப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இதுவரை மொத்தம் 5,677 தெருக்களில் கொரோனா பாதிப்பு உள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்குமுன்பு 4,072 தெருக்களில் பாதிப்பு இருந்தது. கடந்த இரண்டு தினங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தெருக்கள் எண்ணிக்கை 1,605 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News