செய்திகள்
வெங்காயம்

விதை வெங்காயம் விலை திடீர் உயர்வு

Published On 2021-06-11 07:20 GMT   |   Update On 2021-06-11 07:20 GMT
தற்போதைய விலையை எதிர்பார்த்து அதிகளவு விவசாயிகள் வெங்காயம் சாகுபடி செய்கின்றனர். அறுவடையில் 5 டன் மகசூல் 40 ரூபாய்க்கு மேல் விற்றால் மட்டுமே கட்டுப்படியாகும்.
குடிமங்கலம்:

உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில் ஆண்டு தோறும் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது சின்ன வெங்காயம் கிலோ ரூ.50 வரை விற்று வருவதால் அதிகளவு விவசாயிகள் வெங்காயம் நடவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதன்காரணமாக கடந்த வாரம் வரை விதை வெங்காயம் கிலோ ரூ.45 முதல் 50 வரை விற்று வந்த நிலையில் தேவை அதிகரிப்பு காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டு கிலோ ரூ.60 முதல் ரூ. 75 வரை விற்று வருகிறது. இதனால் சாகுபடி செலவு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நேரடியாக சின்ன வெங்காயம் விதை நடவு செய்ய ஏக்கருக்கு 700 கிலோ வரை விதை தேவைப்படுகிறது.  விதைப்புக்கு மட்டுமே  ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு உயர்ந்துள்ள நிலையில் உரம், களை, அறுவடை என ஏக்கருக்கு ரூ.3 லட்சம் வரை சாகுபடி செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏக்கருக்கு 5 டன் வரை மகசூல் கிடைத்து வந்த நிலையில் 3 டன் வரை மட்டுமே கிடைத்து வருகிறது. தற்போதைய விலையை எதிர்பார்த்துஅதிகளவு விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். அறுவடையில் 5 டன் மகசூல் 40 ரூபாய்க்கு மேல் விற்றால் மட்டுமே கட்டுப்படியாகும். சாகுபடி பரப்பு அதிகரித்துள்ள நிலையில் விதை தட்டுப்பாடு இல்லாமலும் குறைந்த விலைக்கு கிடைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News