தொழில்நுட்பம்
ஃபாசில் ஹைப்ரிட் ஹெச்.ஆர். ஸ்மார்ட்வாட்ச்

ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே கொண்ட ஃபாசில் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

Published On 2020-01-31 05:27 GMT   |   Update On 2020-01-31 05:27 GMT
ஃபாசில் நிறுவனத்தின் புதிய ஹைப்ரிட் ஹெச்.ஆர். ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



ஃபாசில் நிறுவனம் இந்தியாவில் ஹைப்ரிட் ஹெச்.ஆர். ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்வாட்ச் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

பாரம்பரிய வாட்ச் தோற்றத்தில் பயனர்களுக்கு ஸ்மார்ட் அம்சங்களின் விவரங்களை காண்பிக்கும் புதிய வாட்ச் நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என ஃபாசில் தெரிவித்துள்ளது. புதிய ஹைப்ரிட் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் இதய துடிப்பை டிராக் செய்து விவரங்களை வழங்கும் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

ஹைப்ரிட் ஹெச்.ஆர். வாட்ச் அழைப்புகள், குறுந்தகவல்களுக்கான நோட்டிஃபிகேஷன்களை காண்பிக்கிறது. இத்துடன் இதய துடிப்பு, உடற்பயிற்சி மற்றும் ரியல்-டைம் வானிலை விவரங்களையும் வழங்குகிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒருமுறை சார்ஜ் செய்தால் இரண்டு வாரங்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிகிறது.



இத்துடன் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் டெக்ஸ்ட் / இமெயில், அழைப்புகளை ஏற்கும் வசதி உள்ளிட்டவையும் மூன்று புஷ் பட்டன்களும் வழங்கப்படுகிறது. இவற்றை வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும்.

ப்ளூடூத் மூலம் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டால் ஃபாசில் ஸ்மார்ட்வாட்ச் ஆப் கொண்டு அதிகளவு விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இத்துடன் வாட்ச் ஃபேஸ் டையலினை கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். 

இத்துடன் லெதர் ஸ்டிராப்களை மாற்றிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இதனால் பயனர்கள் லெதர், சிலிகான் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் என அவரவர் விரும்பும் ஸ்டிராப்களை பயன்படுத்திக் கொள்ளலாம். 

இந்தியாவில் ஃபாசில் ஹைப்ரிட் ஹெச்.ஆர். கொலிடர் டார்க் பிரவுன் லெதர் மற்றும் கொலிடர் பிளாக் சிலிகான் வெர்ஷன்களின் விலை ரூ. 14,995 என்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வெர்ஷன் ரூ. 16,495 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஃபாசில் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அமேசான் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் வாங்கிட முடியும்.
Tags:    

Similar News