செய்திகள்
கோப்புபடம்

சுமை பணியாளர் கூலி உயர்வு - 8வது சுற்று பேச்சுவார்த்தை நாளை நடக்கிறது

Published On 2021-10-11 06:21 GMT   |   Update On 2021-10-11 06:21 GMT
சுமை பணியாளர் கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பூர்:

திருப்பூரில் உள்ள லாரி புக்கிங் அலுவலகங்களில் பணிபுரியும் சுமை பணியாளர்களுக்கு கூலி உயர்வு வழங்குவதற்காக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. திருப்பூர் சரக்கு போக்குவரத்து சங்கம் - ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., மற்றும் அண்ணா தொழிற்சங்கங்கள் இதில் அங்கம் வகிக்கின்றன.

இருதரப்பினரும் 6 சுற்று பேச்சு நடத்தினர். சரக்கு போக்குவரத்து சங்கம், சுமை பணியாளருக்கு நடப்பில் இருந்து ரூ.15 வரை உயர்வு வழங்க சம்மதித்தது. 7-வது சுற்று பேச்சுவார்த்தை ராம்நகரில் உள்ள பி.சி.சி., டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் நடந்தது.

அண்ணா தொழிற்சங்கம் கண்ணப்பன், கண்ணபிரான், ஏ.ஐ.டி.யு.சி., ஆறுமுகம், சேகர், சி.ஐ.டி.யு., ராஜகோபால், மணி, சரக்கு போக்குவரத்து சங்கம் சார்பில் தலைவர் முருகேசன், செயலாளர் சோமசுந்தரம் பங்கேற்று பேசினர். இருதரப்பினரும் சுமூகமான வகையில் பேசினர்.

தொழிற்சங்கத்தினர் ரூ.15க்குமேல் கூடுதல் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்றனர். இதுகுறித்து பரிசீலிப்பதாக சரக்கு போக்குவரத்து சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். 

இதையடுத்து நாளை 12-ந்தேதி 8-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் கூலி உயர்வு வழங்கும் ஒப்பந்தம் விரைவில் நிறைவேறும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News