செய்திகள்
திருவனந்தபுரத்தில் வெறிச்சோடிய சாலைகள்

கேரளாவில் அரசு பஸ், கார்கள் ஓடவில்லை- கடைகள் அடைக்கப்பட்டதால் வெறிச்சோடிய சாலைகள்

Published On 2021-09-27 05:37 GMT   |   Update On 2021-09-27 06:45 GMT
திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டிருந்தன. பெரும்பாலான போக்குவரத்து வாகனங்கள் இயக்கப்படாததால் பரபரப்பாக காணப்படும் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின.
திருவனந்தபுரம்:

மத்திய அரசு கொண்டுவர உள்ள 3 விவசாய சட்டங்களை வாபஸ் வாங்குவது, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு நடத்தப்படும் என்று 40 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுத் கிசான் மோர்ச்சா அறிவித்திருந்தது

கேரளாவில் பல்வேறு கட்சிகள் மற்றும் சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்ததால் இன்று காலை 6 மணி முதல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. ஒருசில தனியார் வாகனங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. மேலும் திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டிருந்தன. பெரும்பாலான போக்குவரத்து வாகனங்கள் இயக்கப்படாததால் பரபரப்பாக காணப்படும் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின.



அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், மருந்து கடைகள், பால் விற்பனை மையங்கள் உள்ளிட்டவை மட்டுமே இயங்கின. ரெயில் மற்றும் விமான போக்குவத்து வழக்கம்போல் நடைபெற்றது. மேலும் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சி, பாலக்காடு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார் ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



Tags:    

Similar News