செய்திகள்
திரிணாமுல் காங்கிரசில் இணைந்த எம்எல்ஏ

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பாஜக எம்எல்ஏ

Published On 2021-10-27 11:06 GMT   |   Update On 2021-10-27 11:06 GMT
கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக எம்எல்ஏ கிருஷ்ண கல்யாணி தன்னை திரிணாமுல் காங்கிரசில் இணைத்துக்கொண்டார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் பாஜகவில் இருந்து சமீபத்தில் விலகிய எம்எல்ஏ கிருஷ்ண கல்யாணி இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி முன்னிலையில் அவர் தன்னை திரிணாமுல் காங்கிரசில் இணைத்துக்கொண்டார். அவரை கட்சி நிர்வாகிகள் வாழ்த்தி வரவேற்றனர்.

முன்னாள் மத்திய மந்திரி தேவஸ்ரீ சவுதரிக்கு எதிராக பேசியதால் கிருஷ்ண கல்யாணிக்கு பாஜக தலைமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனால் அதிருப்தி அடைந்த கிருஷ்ண கல்யாணி, பாஜகவில் இருந்து விலகினார். 

இதேபோல் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், முன்னாள் மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோ மற்றும் முகுல் ராய் உள்ளிட்ட 4 எம்எல்ஏக்கள் பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்து குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News