லைஃப்ஸ்டைல்
வீடு கட்ட போறீங்களா

வீடு கட்ட போறீங்களா? அப்ப இத மறக்காதீங்க...

Published On 2021-08-21 02:09 GMT   |   Update On 2021-08-21 02:09 GMT
வீட்டைச் சுற்றி நிழல் கொடுக்கக்கூடிய மரங்கள் இருப்பது ஆரோக்கியமான பிராணவாயுவை அளிப்பதோடு குளிர்ச்சியையும் கொண்டு வரும். வெப்பத்தைக் குறைக்கும்.
புதிய வீடுகள் கட்டும் பொழுது கூடுமானவரை நல்ல காற்றோட்டமும் அதிகமான வெப்பத்தைஉண்டாக்காமல் வீடு எப்போதும் குளிர்ச்சியாகஇருக்கும்படியும் கட்டுமானம் அமைய வேண்டும். அப்போதுதான் ஏசி உபகரணங்களின் வேலை மிக குறைவாக இருக்கும். இதனால் மின்சாரமும் மிச்சமாகும். நம் உடலின் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். எனவே வீட்டைக் கட்டும்போதுசின்ன சின்னவிஷயங்களில் கவனமாக இருந்தாலே போதும்.

நீர் சேமிப்பு திட்டமானது நீரை மிச்சப்படுத்துவதோடு சூழலையும்குளிர்ச்சியாக வைத்திருக்கும். பெரும்பான்மையான இல்லங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் நிலத்தடி நீரை உறிஞ்சி அதனை பெரிய அளவிலோ அல்லது சிறிய அளவிலோ சுத்திகரிப்பு திட்டத்தின் மூலம் சுத்திகரித்துக்பயன்படுத்துகிறோம். அவ்வாறு பயன்படுத்தும்போது கழிவுநீர் சுத்திகரிப்புக்கு பின் வெளியேறும்போது ஒரு தொட்டியில் சேகரித்து பின் அதனை செடிகளுக்குஊற்றபயன்படுத்தலாம். இதேபோல் துணி துவைக்கும் நீர் மற்றும் குளிக்கும் தண்ணீர் சுத்திகரித்து ஒரு தொட்டியில் சேரும்படிஅமைத்துவிட்டால் அந்த நீரை செடிகளுக்கு பயன்படுத்த முடியும்.

மழைநீர் சேகரிப்பு தொட்டியைநிலத்தடியில் அமைத்து மொட்டை மாடியில் விழும் மழை நீர் அனைத்தையும் கழிவு நீர் கால்வாயில்விட்டுவிடாமல்நிலத்தடிக்குசெல்லுமாறு செய்வோம் என்றால் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படும். மற்றபடி தண்ணீர் குழாய்களில் தண்ணீர் வெளியேறும் அளவை குறைப்பது, நீர் பாய்ச்சும்குழாய்களில்வெளியேறும் தண்ணீர் அளவை குறைப்பது,சமயலறைசிங்கில் தண்ணீர் குழாயை திறந்து கழுவாமல் ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் பிடித்து கழுவுவதோ அல்லது தண்ணீர் மெல்லிய துவாரத்தின் வழியாக பீய்ச்சி அடிப்பது போன்ற குழாய்கள்வைத்தும் தண்ணீரை சேமிக்கலாம்.

வீட்டிற்கு வெப்பம் அதிகமாகாமல் எவ்வாறு தடுக்கலாம் என்றால் மிகப்பெரிய சூரிய சக்தியை மின்சாரமாக மாற்றும் பேனல்களை மொட்டை மாடியில் வைக்கும்போது அவை சூரிய சக்தியை மின்சாரமாக மாற்றுவதோடு வெப்பம் கட்டிடத்தை தாக்காமலும் பாதுகாக்கின்றது. வீட்டைச் சுற்றி நிழல் கொடுக்கக்கூடிய மரங்கள் இருப்பது ஆரோக்கியமான பிராணவாயுவை அளிப்பதோடு குளிர்ச்சியையும் கொண்டு வரும். வெப்பத்தைக் குறைக்கும். வீட்டுக்கு ஜன்னல் அமைப்பது மிக முக்கியமான ஒன்று. அதுவும் காற்று ஒருபுறம் வீட்டிற்குள் நுழைந்து மறுபுறம் வெளியே செல்லும்படி ஜன்னல், வீட்டு வாயிற்படி போன்றவற்றை அமைத்திருக்க வேண்டும். இது வீட்டின் வெப்பநிலையை சமமாக வைத்திருப்பதோடுபிராணவாயுவின்அளவையும் சிறப்பாக வைத்திருக்கும்.

அடுத்தபடியாக வீட்டை அழகுபடுத்த என்று நாம் பூசுகின்றவண்ணங்கள் தரமான வகைகளாக நச்சுத்தன்மை அற்றதாக பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் உபயோகப்படுத்தும் கம்பளங்கள் திரைச்சீலைகள் போன்றவை பெட்ரோலியம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கலப்படம் இல்லாமல் இருப்பது நல்லது. கூடுமானவரை டெரகோட்டாடைல்ஸ் கல் பதித்ததரையும்குளிர்ச்சியைகொடுக்கக் கூடிய சிமெண்ட்தரைகளும் எப்போதும் நல்லவையே..
Tags:    

Similar News