ஆன்மிகம்
கொட்டாம்பட்டி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற ஆடி படையல் விருந்து

கொட்டாம்பட்டி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற ஆடி படையல் விருந்து

Published On 2020-08-15 09:13 GMT   |   Update On 2020-08-15 09:13 GMT
கொட்டாம்பட்டி அருகே மங்களாம்பட்டியில் சுவாமி மதுரைவீரன் சுவாமி ஆடி படையல் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருவிழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டு உணவு அருந்தி சென்றனர்.
கொட்டாம்பட்டி அருகே மங்களாம்பட்டியில் மதுரைவீரன் சுவாமி ஆடி படையல் விருந்து நிகழ்ச்சி வருடம் தோறும் ஆடி மாதம் அங்குள்ள மரத்தின் அடியில் கொண்டாடப்படும். இதற்காக கிராமத்தினர் ஏராளமானோர் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணமாக சேவல்களை பலி கொடுத்து வணங்குவார்கள்.

இதன்படி இந்த ஆண்டு சுமார் 50-க்கும் மேற்பட்ட சேவல்கள் பக்தர்களால் கோவிலுக்கு செலுத்தப்பட்டது. பின்னர் அதனை பலி கொடுத்து ஆண்கள் மட்டுமே அதனை சமைத்து மதுரைவீரன் சுவாமிக்கு படைத்தனர். சேவல் கறியுடன் மொச்சைப்பயறு கலந்து சமைக்கப்பட்டது. பெண்களுக்கு இங்கு அனுமதியில்லை. சமைக்கப்பட்ட இறைச்சி உணவுகளை பெண்கள் உண்பதும் கிடையாது.

முழுக்க, முழுக்க ஆண்கள் மட்டுமே பங்கேற்று உண்டு ருசித்தனர். இந்த திருவிழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டு உணவு அருந்தி சென்றனர். இவ்வாறு வழிபடுவதால் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக பக்தர்கள் குறைந்த அளவிலேயே கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து ஆடி படையல் விழாவை கொண்டாடினர்.
Tags:    

Similar News