வழிபாடு
வீரராகவர் பெருமாள் கோவிலில் ரதசப்தமி விழா

வீரராகவர் பெருமாள் கோவிலில் ரதசப்தமி விழா பக்தர்கள் இல்லாமல் நடந்தது

Published On 2022-02-08 07:48 GMT   |   Update On 2022-02-08 07:48 GMT
ரத சப்தமி தினத்தையொட்டி இன்று வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் சூரிய பகவானை வழிபட்டால் நோய் நொடிகளை போக்கி நீண்ட ஆயுளும், நிறைவான செல்வமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் தை மாதத்தில் வளர்பிறை 7-ம் நாள் வரும் சப்தமி திதியாக ரத சப்தமி திதி வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

இந்த தினம் சூரிய ஜெயந்தியாகவும் கொண்டாடப்படுகின்றது.

இந்த ரத சப்தமி தினத்தையொட்டி இன்று வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் சூரிய பகவானை வழிபட்டால் நோய் நொடிகளை போக்கி நீண்ட ஆயுளும், நிறைவான செல்வமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

விழாவையொட்டி இன்று காலை உற்சவர் வீரராகவ பெருமாள் ரத சப்தமி அலங்காரத்தில் எழுந்தருளி சன்னதி தெருவில் உள்ள நான்கு கால் மண்டபத்தில் உலா வந்து அருள்பாலித்தார். கூட்ட நெரிசலை தடுக்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
Tags:    

Similar News