செய்திகள்
செரீனா வில்லியம்ஸ்

பிரெஞ்சு ஓபன் - செரீனா வில்லியம்சை எளிதில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் ரிபாகினா

Published On 2021-06-06 21:00 GMT   |   Update On 2021-06-06 21:00 GMT
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து உலகின் 8-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் காயத்தால் விலகியுள்ளார்.
பாரிஸ்:

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் 39 வயதான அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், 21 வயதான கஜகஸ்தானின் எலினா ரிபாகினாவும் மோதினர்.

முதல் செட்டை ரிபாகினா 6-3 என எளிதில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் ரிபாகினாவிடம் செரீனா போராடினார். ஆனால் இரண்டாவது செட்டையும் ரிபாகினா 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.
  
இறுதியில், ரிபாகினா  6-3, 7-5 என்ற நேர் செட்களில் செரீனாவை எளிதில் வீழ்த்தி காலிறுக்கு முன்னேறினார்.
Tags:    

Similar News