செய்திகள்
வாக்காளர் பட்டியல்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்- அடுத்த மாதம் 2 நாட்கள் நடக்கிறது

Published On 2020-11-28 09:31 GMT   |   Update On 2020-11-28 09:31 GMT
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் அடுத்த மாதம் 12 மற்றும் 13-ந் தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி அடுத்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 1-ந் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 16-ந் தேதி அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கான சிறப்பு முகாம் கடந்த 21 மற்றும் 22-ந் தேதிகளில் ஏற்கனவே நடைபெற்றது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் போன்றவற்றிற்கான படிவங்கள் பெறப்பட்டது. மேலும் கடந்த 16-ந் தேதி முதல் அரசு வேலை நாட்களில், அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் மற்றும் வாக்குச்சாவடி மையங்களிலும் படிவங்கள் பெறப்பட்டு வருகிறது.

மேலும், சிறப்பு முகாம்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 12 மற்றும் 13-ந் தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News