செய்திகள்
டெங்கு காய்ச்சல்

மழை விட்டுவிட்டு பெய்வதால் வடசென்னையில் டெங்கு காய்ச்சல்

Published On 2019-11-06 09:35 GMT   |   Update On 2019-11-06 09:35 GMT
வடசென்னை பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பதால் அதனை கண்காணித்து கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை:

டெங்கு காய்ச்சல் பாதிப்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்னும் தீவிரமாக உள்ளது. ஒரு சில மாவட்டங்களில் குறைந்து வருகிறது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கடலூர், திருச்சி, தஞ்சாவூர், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பதால் அதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை முடுக்கி விடப்பட்டுள்ளது.

வடசென்னை பகுதியில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதால் அதனை கண்காணித்து கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதிப்புடனும், டெங்கு அறிகுறியுடனும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மழை விட்டுவிட்டு பெய்து வருவதால் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகின்றன. ‘ஏடிஸ்’ கொசுக்கள் வீடுகளை சுற்றி கிடக்கும் தேவையற்ற பொருட்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் இருந்து உற்பத்தியாகிறது. இந்த கொசுக்கள் மூலம்தான் டெங்கு காய்ச்சல் உண்டாகிறது.

இது தவிர தற்போது ஒருவிதமான வைரஸ் காய்ச்சல், டைபாய்டு, மலேரியா, எலி காய்ச்சல் போன்றவற்றால் மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வியாசர்பாடி, பெரம்பூர், அயனாவரம், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, கொடுங்கையூர், திருவொற்றியூர், மாதவரம் உள்ளிட்ட பல பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது.

சிறு குழந்தைகள், பெரியவர்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் டெங்கு அறிகுறிகளுடன் நூற்றுக்கணக்கானவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News