கோவில்கள்
படேஷ்வர் ஆலயங்கள்

படேஷ்வர் ஆலயங்கள்- மத்திய பிரதேசம்

Published On 2022-03-01 06:02 GMT   |   Update On 2022-03-01 06:02 GMT
சம்பல் ஆற்றின் பள்ளத்தாக்கில், அடர்ந்த காடுகள் நிறைந்த இடத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் இந்த படேஷ்வர் கோவில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொரேனாவில் இருந்து கிழக்கே 30 கிலோமீட்டர் தொலைவிலும், குவாலியருக்கு வடக்கே 35 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது, ‘படேஷ்வரா் கோவில்கள்.’ இந்த ஆலயம் அமைந்த பகுதி ஒரு பழமையான, ஆச்சரியம் மிகுந்த தொல்பொருள் தளங்களில் ஒன்றாகும். சம்பல் ஆற்றின் பள்ளத்தாக்கில், அடர்ந்த காடுகள் நிறைந்த இடத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் இந்த படேஷ்வர் கோவில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இங்கு சிவன், மகாவிஷ்ணு மற்றும் அம்பாள் ஆகியோருக்காக ஏற்படுத்தப்பட்ட சுமார் 200-க்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன. இந்த ஆலயத்தின் ஆரம்ப கால கட்டுமானப் பணிகள் கி.பி. 750-800-ம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கால சூழ்நிலைகளின் மாற்றத்தால் இவற்றில் பெரும் பகுதி இடிபாடுகளுக்கு உள்ளாகி இருக்கிறது. 19-ம் நூற்றாண்டிற்கு முன்வரை இந்த இடத்தைப் பற்றி எவரும் அறிந்திருக்கவில்லை. 1882-ம் ஆண்டு, அலெக்சாண்டர் கன்னிங்காம் என்பவர், படேஷ்வருக்கு சென்ற பிறகுதான் இதுபற்றிய விவரம் பலருக்கும் தெரியவந்திருக்கிறது.

1924-ம் ஆண்டில், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை இந்த இடத்தை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. அதன்பிறகு இடிபாடுகள் சரிசெய்யப்பட்டு, 2005-ம் ஆண்டில்தான், படேஷ்வரர் திருத்தலம் மீண்டும் புத்துயிர் பெற்றதாகக் கூறப்படுகிறது.
Tags:    

Similar News