செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 7 மாணவர்களுக்கு கொரோனா

Published On 2021-09-20 10:36 GMT   |   Update On 2021-09-20 12:38 GMT
திருப்பூரில் 44 மாணவ மாணவிகள் மற்றும் 6 ஆசிரியர்கள் என 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் இன்று மாநகர பகுதியில் உள்ள வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் 4 மாணவிகளுக்கும், வெள்ளகோவில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவன் என 7 மாணவர்களுக்கு  கொரோனா உறுதியானது. இதையடுத்து அந்த பள்ளிகளை 3 நாட்கள் மூட கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.

திருப்பூர் மாவட்டத்தில் தற்போது வரை மாநகரப் பகுதிகளில் நெசவாளர் காலனி மேல்நிலைப்பள்ளி ,சின்னசாமி அம்மாள் மேல்நிலைப்பள்ளி ,வீரபாண்டி மேல்நிலைப்பள்ளி மற்றும் மாவட்டத்தில் சேவூர், வெள்ளக்கோவில், பொங்கலூர், பெதப்பம்பட்டி, மூலனூர் என  அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 10, 11,12ம் வகுப்பு மாணவர்கள் என 44 மாணவ மாணவிகள் மற்றும் 6 ஆசிரியர்கள் என 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து பள்ளிகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News