செய்திகள்
காங்கிரஸ் பிரமுகர்

கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு காங்கிரஸ் பிரமுகர் தர்ணா போராட்டம்

Published On 2021-01-12 14:39 GMT   |   Update On 2021-01-12 14:39 GMT
கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு நோயால் பாதிக்கப்பட்டு அழுகிப்போன பயிர்களை உடம்பில் தழுவிக் கொண்டு காங்கிரஸ் பிரமுகர் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கயத்தாறு:

கயத்தாறில் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட துணைத் தலைவர் அய்யலுசாமி நேற்று கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு நோயால் பாதிக்கப்பட்டு அழுகிப்போன பயிர்களை உடம்பில் தழுவிக் கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர் அவர் கயத்தாறு தாசில்தார் பாஸ்கரனிடம் கோரிக்கை மனுவை கொடுத்தார். அந்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் காப்பீடு வழங்குவதை புறக்கணிப்பதை கண்டித்தும், அவர்களுக்கு 2018- 2019, 2019- 2020- ம் ஆண்டுக்கான பயிர் காப்பீ்டு தொகை இதுவரை பல்வேறு கிராமங்களுக்கு வழங்கவில்லை என்று, அந்த கிராமங்களில் உடனடியாக பயிர் காப்பீடு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டது. அவருடன் கயத்தாறு ஒன்றிய காங்கிரஸ் தலைவர் செல்லத்துரை, நகர மகளிர் அணித் தலைவி சுசிலா மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News