லைஃப்ஸ்டைல்
வீட்டு வேலை

கொரோனாவிலிருந்து தப்பிக்க வீட்டு வேலை செய்பவர்களிடம் எப்படி நடந்த கொள்ள வேண்டும்

Published On 2020-07-08 08:13 GMT   |   Update On 2020-07-08 08:13 GMT
இப்பொழுது நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய சூழலில் உள்ளோம். கொரோனா தொற்று யாரிடமிருந்து வேண்டுமானாலும் வரலாம் என்ற சூழல் இப்பொழுது உருவாகியுள்ளது.
கொரோனா வைரஸ் மனிதனிடமிருந்து மனிதனுக்கு மட்டுமே பரவுவதில்லை மனிதனிடம் இருந்து சில பொருள்களிலும் சில நாட்கள் சில நேரங்களில் இருக்கும். அந்தப் பொருள்களை நாம் தொட்டு விட்டாலே நமக்கும் அந்த வைரஸ் தொற்றி விடுகிறது. எனவே மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது அவசியமாகிவிட்டது. கைகளை அடிக்கடி கழுவுவது கட்டாயமான காரியமாகி கொள்ள வேண்டும். கைகளை முகத்திற்கு கொண்டு செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். முகமூடி அணிவதையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

இது போன்ற விதிமுறைகளை நாம் பின்பற்றினாலும் நம் வீட்டுக்கு வருபவரும் இந்த விதிமுறைகளை தவறாது பின்பற்றி இருப்பார் என்று நம்மால் கூற இயலாது. எனவே நம் வீட்டுக்கு வருபவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. வீட்டிற்கு வேலைக்கு வருபவர்களிடம் என்ன காரியம் செய்யச் சொல்லலாம், என்ன செய்ய சொல்லக் கூடாது என்பதை பற்றி தற்பொழுது பார்க்கலாம்.

வீட்டிற்கு அவர்கள் வேலைக்கு வருவதற்கு முன்பு வீட்டுக்கு வெளியே முகமூடி மற்றும் கையுறைகளை கண்டிப்பாக அணிவித்து தான் வீட்டிற்குள் வர வேண்டும் என்று சொல்லி விடுங்கள். முடிந்தவரை தினமும் புதிய கையுறை மற்றும் புதிய முகமூடியை அவர்களுக்கு கொடுக்க முயற்சி செய்யுங்கள். அப்படி இல்லை என்றாலும் அவர்கள் போகும் பொழுது அதை நன்றாக துவைத்து விட்டு செல்லுமாறு அறிவுரை கூறுங்கள் முடிந்தவரை சமையல் செய்ய அனுமதிக்க வேண்டாம். இன்னும் சற்று நாளைக்கு உங்களுக்கு வேண்டியதை நீங்களே செய்வது மிகவும் அவசியமான காரியமாக உள்ளது.

உங்கள் வீட்டுக்கு வருபவர்களுக்கு, அவர்களுக்கு வைரஸ் தொற்று உள்ளதை அறியாமலேயே உங்களுக்குத் தந்துவிட வாய்ப்புகள் உண்டு. அவர்கள் சென்ற இடத்தை எல்லாம் நீங்கள் கேட்டு அறிவது கடினமான காரியம். எனவே சற்று விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியமாகிறது. முடிந்தவரை அவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. இந்த பிரச்சனைகள் முடியும் வரை, அனைத்து வெளியாட்களிடம் இருந்தும் சற்று விலகி இருந்து பேசுவது மிகவும் நல்லது. முடிந்தவரை நேரில் சென்று பேசுவதை தவிர்த்து விட்டு தொலைபேசியில் பேசுவதை செய்யலாம்.

உங்களது சாப்பாட்டை முடிந்தவரை நீங்களே சமைத்து சாப்பிட முயற்சி செய்ய வேண்டும். உங்கள் வீட்டு வேலை பார்ப்பவர்களை பாத்திரம் கழுவ சொல்லவும் வேண்டாம் என்று கூறுகின்றனர். ஏனென்றால் சில பொருட்கள் மீது அந்த வைரஸ் ஆனது 12 மணிநேரம் முதல் இரண்டு நாட்கள் வரை இருக்கும். ஒருவேளை அவர்கள் பாத்திரம் கழுவி சென்று விட்டாலும் நீங்களும் கையுறைகளை அணிந்து பாத்திரங்களை ஒருமுறை கழுவி விடுவது நல்லது. பின்பு கையுறைகளை உங்கள் கைபடாமல் கழற்றி சோப்பில் ஊறவைத்து வைத்துவிடவேண்டும். முடிந்தவரை புதிய கையுறைகள் மற்றும் முகமூடிகள் வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. இல்லை என்றாலும் தினமும் நன்றாக சோப்பில் ஊறவைத்து அதை வெயிலில் காய வைத்து பயன்படுத்துவது முக்கியம் ஆகும். 
Tags:    

Similar News