செய்திகள்
திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதை காணலாம்.

குமரியில் மழை நீடிப்பு- தக்கலையில் 9 மி.மீ. பதிவு

Published On 2021-07-15 05:20 GMT   |   Update On 2021-07-15 05:20 GMT
திற்பரப்பு அருவி பகுதியில் கொட்டி வரும் மழையால் அங்கு குளுகுளு சீசன் நிலவுகிறது. அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.

நேற்றிரவும் மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. பின்னர் சாரல் மழை பெய்தது. விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

தக்கலை பகுதியிலும் அதிகாலை முதலே சாரல் மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 9 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. பூதப்பாண்டி, கோழிப்போர் விளை, அடையாமடை, குருந்தன்கோடு, கொட்டாரம், மயிலாடி பகுதிகளிலும் மழை பெய்தது. அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை கொட்டியது.

திற்பரப்பு அருவி பகுதியில் கொட்டி வரும் மழையால் அங்கு குளுகுளு சீசன் நிலவுகிறது. அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.82 அடியாக உள்ளது. அணைக்கு 632 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 506 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 74.22 அடியாக உள்ளது. அணைக்கு 157 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்ட் முறையில் திறந்து விடப்படுகிறது.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

பேச்சிப்பாறை-1, பெருஞ்சாணி-1, பூதப்பாண்டி-2.2, களியல்-5, தக்கலை-9, குழித்துறை-6, நாகர்கோவில்-2.2., சுருளோடு-2.6, பாலமோர்- 4.2, கோழிப்போர்விளை-6, அடையாமடை-6, குருந்தன் கோடு-7.6, முள்ளாங்கினா விளை-5, ஆணைக்கிடங்கு- 5.2.



Tags:    

Similar News