உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஈரோடு மாவட்டத்தில் 3 நாட்கள் மது கடைகள் அடைப்பு

Published On 2022-01-12 10:45 GMT   |   Update On 2022-01-12 10:45 GMT
ஈரோடு மாவட்டத்தில் 3 நாட்கள் மதுக்கடைகள்அடைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து உள்ளார்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் 3 நாட்கள் மதுக்கடைகள் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து உள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் வருகிற 15-ந் தேதி திருவள்ளுவர் தினம், 18-ந் தேதி வள்ளலார் நினைவுதினம் மற்றும் 26-ந் தேதி குடியரசுதினம் ஆகிய நாட்களை முன்னிட்டு அரசு மது கடைகள், அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும்  மதுபான விடுதிகள், ஓட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மூடப்பட வேண்டும் எனவும், அன்றைய தினங்களில் “மது விற்பனை இல்லாத நாளாக”  அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அரசு மதுபானக்கடைகள், அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும்  மதுபான உரிமதலங்கள் மூடப்பட்டிருக்கும்.

மேலும் அன்றைய தினங்களில் மதுபான விற்பனைகள் ஏதும்நடைபெறாது என்றும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்
Tags:    

Similar News