ஆட்டோமொபைல்
எஸ் பிரெஸ்ஸோ டீசர்

டீசரில் அசத்தும் எஸ் பிரெஸ்ஸோ

Published On 2019-09-23 07:22 GMT   |   Update On 2019-09-23 07:22 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எஸ் பிரெஸ்ஸோ காரின் புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது.



2019 ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ கார் செப்டம்பர் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் காரின் டீசரை மாருதி சுசுகி வெளியிட்டுள்ளது.

இந்திய சந்தையில் மைக்ரோ எஸ்.யு.வி.யாக வெளியாகும் எஸ் பிரெஸ்ஸோ கார் எஸ்.யு.வி. அளவுகளில், விடாரா பிரெஸ்ஸா போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ் பிரெஸ்ஸோ கார் முற்றிலும் புதிய தலைமுறையில் உருவாக்கப்படிருக்கும் என தெரிகிறது.



இது விரைவில் அமலாக இருக்கும் அனைத்து வித கிராஷ் டெஸ்ட்களில் வெற்றி பெறும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இது பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் 1.0 லிட்டர் என்ஜின் கொண்டிருக்கும் புதிய கார் 68 பி.எஸ். மற்றும் 90 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு ஆட்டோமேடிக் அல்லது ஆப்ஷனல் ஆட்டோமேட்டெட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும்.

இந்தியாவில் எஸ். பிரெஸ்ஸோ கார் ரெனால்ட் க்விட் மாடலுக்கு போட்டியாக இருக்கும் எனலாம். இதன் விலை ரூ. 5 லட்சசத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 6.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
Tags:    

Similar News