உள்ளூர் செய்திகள்
எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம்

5-ம் ஆண்டு நினைவுநாள்: ஜெயலலிதா சமாதியில் தலைவர்கள் நாளை அஞ்சலி

Published On 2021-12-04 05:52 GMT   |   Update On 2021-12-04 07:33 GMT
சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அ.தி.மு.க தலைமைக் கழகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை:

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மறைந்து நாளையுடன் 5 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

இதையொட்டி ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவுநாளை கடைப்பிடிக்க அ.தி.மு.க. மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அ.தி.மு.க தலைமைக் கழகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நாளை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

மாவட்ட கழக அமைப்புகளிலும் ஜெயலலிதா நினைவு நாளை கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


Tags:    

Similar News