செய்திகள்
டேவிட் வார்னர், நாதன் லயன்

ஆஷஸ் தொடரின் மோசமான ஃபார்மில் இருந்து டேவிட் வார்னர் மீண்டு வருவார்: நாதன் லயன்

Published On 2019-11-17 12:29 GMT   |   Update On 2019-11-17 12:29 GMT
ஆஷஸ் தொடரில் 95 ரன்கள் மட்டுமே அடித்த டேவிட் வார்னர், அந்த மோசமான ஃபார்மில் இருந்து மீண்டு வருவார் என நாதன் லயன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். ஓராண்டு தடைக்குப்பின் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதன்முறையாக களம் இறங்கினார். முதல் டெஸ்ட் தொடரே அவருக்கு சிறப்பாக அமையவில்லை. 10 இன்னிங்சில் 95 ரன்கள் மட்டுமே அடித்தார். சராசரி 9.5 ஆகும்.

ஆஷஸ் தொடருக்குப்பின் ஆஸ்திரேலியா, தனது சொந்த மண்ணில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தத் தொடர் வருகிற 21-ந்தேதி தொடங்குகிறது. இதில் வார்னர் சிறப்பாக விளையாடுவார் என நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாதன் லயன் கூறுகையில் ‘‘டேவிட் வார்னர் உலகத்தரம் வாய்ந்த வீரர். ஃபார்ம் இன்றி தவிக்கும் அவர், அதில் இருந்து மீண்டு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்  என்று எதிர்பார்க்கிறேன்.

ஆஷஸ் தொடரில் அவரது ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது என்பதில் எந்த சந்தேகமம் கிடையாது. ஆனால்,  நாங்கள் ஆஷஸ் கோப்பையை தக்க வைத்த அணியில் அவர் ஒரு அங்கமாகவே இருந்தார்.

நெருக்கடி உள்ளது என்பதை வார்னர் உணர்ந்திருப்பார். சவால்களை ஏற்றுக் கொண்டு அதில் இருந்து முன்னோக்கிச் சென்று சிறப்பாக விளையாட முயற்சி செய்ய வேண்டும்’’ என்றார்.
Tags:    

Similar News