லைஃப்ஸ்டைல்
கியாஸ் சிலிண்டர்கள் கையாளும் போது கவனம் தேவை

கியாஸ் சிலிண்டர்கள் கையாளும் போது கவனம் தேவை

Published On 2021-10-15 02:58 GMT   |   Update On 2021-10-15 09:04 GMT
வீடுகளில் சமையல் செய்ய பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர்களை கையாளுவதில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். இல்லாவிட்டால் ஆபத்து நிச்சயம்.
பல்வேறு தொழில் நிறுவனங்களிலும், வீடுகளில் சமையல் செய்யவும் கியாஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. சிலிண்டர்களை கையாளுவதில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். இல்லாவிட்டால் ஆபத்து நிச்சயம்.

*2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரு மெக்கானிக் மூலம் கியாஸ் அடுப்பையும், சிலிண்டர்களையும் பரிசோதித்துக்கொள்வது முக்கியம்.

* கியாஸ் சிலிண்டரை நடைபாதையிலோ அல்லது தரை மட்டத்துக்கு கீழோ வைத்து பயன்படுத்தாதீர்கள்.

* ரப்பர் குழாயில் அவ்வப்போது ஏதேனும் வெடிப்பு உள்ளதா அல்லது சரியாக பொருத்தப்பட்டுள்ளதா? என்று கவனிக்க வேண்டும்.

* இரவு தூங்க செல்லும் முன்பும், வெளியே செல்லும் முன்பும் ஒரு முறைக்கு பல முறை ரெகுலேட்டர் வால்வு மூடி இருக்கிறதா? அடுப்பு அணைக்கப்பட்டு உள்ளதா என்பதை கவனிக்கவும்.

* வால்வு வழியாக கியாஸ் கசிவு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* குழந்தைகள் தொடும் உயரத்தில் இருக்கக்கூடாது.

* சமையல் அறை நல்ல காற்றோட்டமாகவும், சுலபமாக வெளியேறுவதற்கு வசதியாக இருக்க வேண்டும்.

* சமையல் அறையுடன் படுக்கை அறை சேர்ந்து இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* அடுப்பை ஜன்னலுக்கு எதிரே வைக்காமல் தள்ளி வைக்க வேண்டும். இதனால் ஜன்னல் வழியாக அடிக்கும் காற்று நெருப்பை பாதிக்காது.

* சமைக்கும் போது நைலான் ஆடைகளை அணியாதீர்கள்.

* சமையல் முடியும் வரை சமையல் அறையிலேயே இருங்கள்.

* சமையல் அறையில் அடுப்பின் மேல் நேராக காற்று படும்படி மின்விசிறி இருக்கக்கூடாது.

* சமைக்கும் பகுதி திரைச்சீலைக்கு அருகில் இருந்தால் நீளமான திரைச்சீலைகளை பயன்படுத்தாதீர்கள்.
Tags:    

Similar News