செய்திகள்

பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா

Published On 2019-05-03 16:20 GMT   |   Update On 2019-05-03 18:14 GMT
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #IPL2019 #KXIPvKKR
ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் மொகாலியில் நடைபெற்று வருகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கத்தில் இருந்தே தடுமாறிய லோகேஷ் ராகுல் 7 பந்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய கிறிஸ் கெய்ல் 14 பந்தில் 14 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இந்த இரண்டு விக்கெட்டுக்களையும் சந்தீப் வாரியர் கைப்பற்றினார்.



இதனால் பஞ்சாப் 4.1 ஓவரில் 22 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு முக்கிய விக்கெட்டுக்களை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு மயாங்க் அகர்வால் உடன் வெஸ்ட்இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். பூரன் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

பஞ்சாப் அணி 19.5 ஓவரில் 91 ரன்கள் எடுத்திருக்கும்போது பூரன் 48 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அவர் 27 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் இந்த ரன்னை அடித்தார். அதன்பின் மந்தீப் சிங் களம் இறங்கினார். அணியின் ஸ்கோர் 13.3 ஓவரில் 111 ரன்னாக இருக்கும்போது மயாங்க் அகர்வால் 26 பந்தில் 36 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார்.



5-வது விக்கெட்டுக்கு மந்தீப் சிங் உடன் சாம் குர்ரான் ஜோடி சேர்ந்தார். அதன்பின் பஞ்சாப் அணியின் ஸ்கோர் வேகத்தில் சற்று தடை ஏற்பட்டது. அணியின் ஸ்கோர் 17.3 ஓவரில் 149 ரன்னாக இருக்கும்போது மந்தீப் சிங் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

6-வது விக்கெட்டுக்கு சாம் குர்ரான் உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். சாம் குர்ரான அதிரடியாக விளையாடி கடைசி ஓவரில் 22 ரன்கள் விளாச கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்துள்ளது.



கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டி 23 பந்தில் தனது முதல் அரைசத்தை பூர்த்தி செய்த சாம் குர்ரான், 24 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 55 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிரிஸ் லின், உஸ்மான் கில் இறங்கினர். இந்த ஜோடி முதல் 6 ஓவரில் 62 ரன்கள் எடுத்தனர். கிரிஸ் லின் 22 பந்துகளில் 46 எடுத்து வெளியேறினார். இதில் 5 பவுண்டரிகளும் 3 சிக்சர்களும் அடங்கும்.

அடுத்து வந்த உத்தப்பா முருகன் அஸ்வின் வீசிய 9-வது ஓவரில் 2 பவுண்டரி 1 சிக்ஸ்  விளாசினார். அவர் 14 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த போது அஸ்வின் பந்து வீச்சில் வெளியேறினார். இந்நிலையில் உஸ்மான் கில் உடன் ரஸல் ஜோடி சேர்ந்து அணியின் ரன் வேகத்தை கனிசமாக உயர்த்தினர். உஸ்மான் கில் 37 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். ரஸல் 14 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து போது வெளியேறினார். 15 ஓவர்களில் கொல்கத்தா அணி 151 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்திருந்தது.

இதனையடுத்து உஸ்மான் கில் உடன் கேப்டன் தினேஷ் கார்த்தி ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 ஓவர்கள் மீதம் உள்ள நிலையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. உஸ்மான் கில் 49 பந்துகளில் 65 ரன்களிலும் தினேஷ் கார்த்திக் 9 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

பஞ்சாப் தரப்பில் அஸ்வின், டை, முகமது சமி தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். #IPL2019 #KXIPvKKR
Tags:    

Similar News