தொழில்நுட்பச் செய்திகள்
ரெட்மி கே50 கேமிங் ஸ்மார்ட்போன்

வெறும் ஒரு நிமிடத்தில் 70,000 யூனிட்டுகள் விற்று தீர்ந்து சாதனை படைத்த ஸ்மார்ட்போன்.. என்ன போன் தெரியுமா?

Published On 2022-02-19 05:43 GMT   |   Update On 2022-02-19 05:43 GMT
இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை மூலம் சுமார் ரூ.336 கோடி லாபத்தை அந்நிறுவனம் ஈட்டியுள்ளது.
ரெட்மி நிறுவனம் புதிய ரெட்மி கே50 கேமிங் ஸ்மார்ட்போனை சீனாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து விற்பனைக்கு வந்த இந்த போன் முதல் விற்பனையில், வெறும் ஒரு நிமிடத்திலேயே 70,000 யூனிட்டுகளுக்கும் மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

இதன்மூலம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.336 கோடி லாபத்தை ரெட்மி நிறுவனம் ஈட்டியுள்ளது. இந்த போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.39,000-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த போனில் 6.67-inch OLED display FHD+ ரெஷொலியூசனுடன் 120Hz ரெப்ரெஷ்ரேட், 480Hz சாம்பிளிங் ரேட்டுடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளே HDR 10+ மற்றும் MEMC ஆதரவுடன் DCI-P3 color gamut-ஐ தருகிறது. இந்த போன் Snapdragon 8 Gen1 chipset-ஐ கொண்டுள்ளது. எவ்வளவு தான் கேம் ஆடினாலும் சூடாகாமல் குளிர்ச்சியுடன் வைத்திருக்க இதில் உள்ள பெரிய VC chamber உதவுகிறது. 



இந்த போன் 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜை கொம்ண்டுள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சமாக 4,700mAh பேட்டரி 120W அதிவேக சார்ஜிங் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வெறும் 17 நிமிடங்களில் இதன் சார்ஜ் 0 சதவீதத்தில் இருந்து 100 சதவீதத்தை எட்டிவிடும். இந்த போனில் 3 பின்பக்க கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இதில் 64MP Sony IMX686 பிரைமரி கேமரா, 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா-வைட் லென்ஸ், 2 மெகாபிக்ஸல் டெலி மேக்ரோ சென்சார், 20 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News