இந்தியா
உலக எய்ட்ஸ் தினம்

இன்று உலக எய்ட்ஸ் தினம் - பிரமாண்ட மணல் சிற்பத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்திய கலைஞர்

Published On 2021-12-01 00:10 GMT   |   Update On 2021-12-01 00:10 GMT
எய்ட்ஸ் நோய் வரலாற்றிலேயே மிக கொடூரமான தொற்று நோயாகக் கருதப்படுகிறது.
பூரி:

உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988-ல் நடைப்பெற்ற எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

1981-ம் ஆண்டிலிருந்து 2007-ம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோயால் இறந்தவரின் எண்ணிக்கை 250 லட்சங்களுக்கு மேல். மற்றும் 2007-ம் ஆண்டு வரை 332 லட்சம் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வந்தனர். இதனால் இந்நோய் வரலாற்றிலேயே மிக கொடூரமான தொற்றுநோயாகக் கருதப்படுகிறது. 2004-ம் ஆண்டு உலக எய்ட்ஸ் பிரசாரம் ஒரு சுதந்திர சங்கமாக மாறியது. 

இந்நிலையில்,  இன்று உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, பத்மஸ்ரீ விருது பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் பிரமாண்ட விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளார். 

Tags:    

Similar News