ஆன்மிகம்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அத

வேகமெடுக்கும் கொரோனா 2-வது அலை: தஞ்சை பெரியகோவில் மூடப்பட்டது

Published On 2021-04-16 09:25 GMT   |   Update On 2021-04-16 09:25 GMT
தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் இன்று காலை மூடப்பட்டது. இதற்காக கோவில் நுழைவுவாயில் கதவு அடைக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட வேண்டும் என தொல்லியல்துறை உத்தரவிட்டது.

அதன்படி தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் இன்று காலை மூடப்பட்டது. இதற்காக கோவில் நுழைவுவாயில் கதவு அடைக்கப்பட்டது. முன்புறம் பேரிகார்டுகள் கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டது. அங்கு போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் இன்று வழக்கம்போல் பெரிய கோவிலை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள், பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பலர் சாலையில் நின்றவாறு பெரிய கோவில் அழகை ரசித்து சென்றனர்.

இருந்தாலும் வழக்கமான பூஜைகள் பக்தர்கள் இன்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பரவலால் வருகிற 23-ந் தேதி நடைபெறவிருந்த சித்திரை திருவிழா தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டும் சில மாதங்கள் கொரோனா பரவலால் பெரிய கோவில் மூடப்பட்டு தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News