செய்திகள்
காவலன் செயலி

காவலன் செயலியை 4 நாளில் 1 லட்சம் பேர் பதிவிறக்கம் - போலீஸ் கமி‌ஷனர் தகவல்

Published On 2019-12-10 07:37 GMT   |   Update On 2019-12-10 07:37 GMT
காவலன் செயலி விழிப்புணர்வை ஏற்படுத்திய நான்கு நாட்களில் 1 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாக போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னை ராணி மேரி கல்லூரியில் காவலன் செயலியை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ராணிமேரி கல்லூரி அருகே டி.ஜி.பி. அலுவலகம் இருக்கிறது. உங்களுக்கு பிரச்சினை என்றால் முதலில் அங்கு தகவல் சென்று விடும். காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு உங்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் அந்த பட்டனை அழுத்தினால் உடனே காவல்துறை உதவும். தமிழக முதலமைச்சரால் சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலியை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சென்னை ஐடி ஊழியர் லாவண்யாவிற்கு காவல்துறை உடனே உதவியது. பாதுகாப்பான உணர்வு இல்லையென்றால் உடனே காவலன் செயலி மூலம் தெரிவிக்கலாம். இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரங்களாக சென்னை, கோவை மாநகரங்கள் உள்ளன.

அம்மா ரோந்து வாகனமும் உங்களை தேடிவரும். அவர்களிடம் உங்கள் குறைகளை சொல்லலாம். முகம் தெரியாத நபர்களோடு சமூக ஊடகங்களில் பழகுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் நல்ல நண்பர்களை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். காவலன் செயலி பற்றி உங்கள் குடும்பத்தினருக்கும் சொல்லுங்கள்.



காவலன் செயலி விழிப்புணர்வை ஏற்படுத்திய நான்கு நாட்களில் 1 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். தினமும் 20 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் கமி‌ஷனர் பிரேம்ஆனந்த் சின்கா கலந்து கொண்டார்.
Tags:    

Similar News