ஆன்மிகம்
வேடசந்தூர் அருகே சிவலிங்க வடிவில் உருவாகும் பிரமாண்ட கோவில்

வேடசந்தூர் அருகே சிவலிங்க வடிவில் உருவாகும் பிரமாண்ட கோவில்

Published On 2021-09-27 05:01 GMT   |   Update On 2021-09-27 05:01 GMT
லிங்கேஸ்வரா கோவிலில் பிரதிஷ்டை செய்ய காசிக்கு சென்று சிவலிங்கம் சிலை மற்றும் நந்தி சிலைகள் வாங்கி வந்து சிறப்பு பூஜை செய்து, இன்னும் சில மாதங்களில் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.
வேடசந்தூர் அருகே அழகாபுரி வழியாக கரூர் செல்லும் சாலையில் சுப்பிரமணியபுரம் என்ற கிராமத்தில் 27 அடி உயரத்தில் சிவலிங்க வடிவில் பிரமாண்டமாக லிங்கேஸ்வரா கோவில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவிலை கூவக்காபட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமத்தில் உள்ள சிவபக்தர்கள் சேர்ந்து கட்டி வருகின்றனர்.

கோவில் கட்டும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. இங்கு 21 அடி அகலத்தில் அமைக்கப்படும் கோவிலின் பக்கவாட்டு பகுதியில் கருப்பு நிற மார்பிள் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்ய காசிக்கு சென்று சிவலிங்கம் சிலை மற்றும் நந்தி சிலைகள் வாங்கி வந்து சிறப்பு பூஜை செய்து, இன்னும் சில மாதங்களில் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.

தற்போது சுப்பிரமணியபுரம் வழியாக செல்பவர்கள், அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் பிரமாண்ட சிவலிங்க கோவிலை ஆச்சரியத்தோடு வியந்து பார்த்து செல்கின்றனர். இந்த கோவில் அமைப்பது குறித்து கிராம மக்களிடம் கேட்டபோது, கிராமத்தில் உள்ள பெரியவர்களின் கனவில் சிவன் தோன்றி தனக்கு கோவில் கட்டி வணங்கினால் ஊர் செழிக்கும். மக்கள் மனநிம்மதியோடு வாழ்வார்கள் என்று கூறியதாக தெரிவித்தனர்.
Tags:    

Similar News