செய்திகள்
மார்னஸ் லாபஸ்சேன்

ஐபிஎல் ஏலத்தில் ஏலம் போகாதது மறைமுகமாக கிடைத்த ஆசீர்வாதம்: ஆஸி. வீரர் சொல்கிறார்

Published On 2021-04-29 11:39 GMT   |   Update On 2021-04-29 11:39 GMT
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் லாபஸ்சேன், ஏலத்தில் ஏலம் போகாதது நல்லது எனத் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் வீரர்கள், பயிற்சியாளர்கள் என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று விளையாடி வருகிறார்கள். இந்தியாவில் கொரோனா தொற்று தற்போது சூறாவளியாக அடித்து வருகிறது. இதில் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் சிக்கித் தவித்து வருகிறார்கள்.

இந்தியாவில் உருமாறிய கொரோனா, ஆஸ்திரேலியாவில் புகுந்து சேதமாக்கிடவிடக் கூடாது என்பதால், அந்நாட்டு அரசு இந்தியாவில் இருந்து விமானங்கள் செல்ல தடைவிதித்துள்ளது. மேலும், ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களே, அவர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. விமானத்தடை மே 15-ந்தேதி வரை உள்ளது.

இந்த நிலையில் பெரும்பாலான ஆஸ்திரேலிய வீரர்கள் சொந்த நாடு திரும்ப விரும்புகிறார்கள். இறுதிக்கட்டத்தில் ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை சொந்த நாடு திரும்பிவிட்டனர்.

இனிமேல் ஆஸ்திரேலியா செல்வது கடினம். இந்த நிலையில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஐபில் ஏலத்தில் ஏலம் எடுக்கப்படாதது மறைமுகமாக கிடைத்த ஆசீர்வாதம் என ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் லாபஸ்சேன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லாபஸ்சேன் கூறுகையில் ‘‘நான் நிச்சயமான ஐபிஎல் தொடரில்இருந்து விளையாடாததை முறைமுகமாக கிடைத்த அசீர்வாதமாக நினைக்கிறேன். ஐபிஎல் தொடரில் விளையாட மிகவும் விரும்பினேன். ஐபிஎல் தலைசிறந்த தொடர். ஆனால், நாணயத்தின் இருபக்கம் போல் எனது நிலை. ஐபிஎல் சென்றிருந்தால் உள்நாட்டு தொடரில் பட்டம் வென்றிருக்க முடியாது. இது அடிக்கடி வருவதல்ல. 2-வதாக, இந்தியாவில் தற்போதை சூழ்நிலை சிறப்பாக இல்லை’’ என்றார்.
Tags:    

Similar News