ஆன்மிகம்
குருப்பெயர்ச்சி

புளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா 28-ந்தேதி நடக்கிறது

Published On 2019-10-15 06:34 GMT   |   Update On 2019-10-15 06:34 GMT
தட்சிணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு 28-ந்தேதி இரவு 7 மணிக்கு ருத்ர ஏகாதசி, நள்ளிரவு 12.57 மணிக்கு குருப்பெயர்ச்சி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடக்கிறது.
செங்கோட்டை அருகே உள்ள புளியரையில் பிரசித்தி பெற்ற தட்சிணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா ஆண்டுதோறும் நடைபெறும். வருகிற 28-ந் தேதி இரவு 12.57 மணிக்கு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசிக்கிறார்.

அதனை முன்னிட்டு வருகிற 26-ந் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், அபிஷேகம், தீபாராதனை, 27-ந் தேதி காலை 8 மணிக்கு மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், பகல் 12 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், 28-ந் தேதி இரவு 7 மணிக்கு ருத்ர ஏகாதசி, நள்ளிரவு 12.57 மணிக்கு குருப்பெயர்ச்சி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடக்கிறது.

ஏற்பாடுகளை சுசீந்திரம், கன்னியாகுமரி மாவட்ட கோவில்கள் இணை ஆணையர் அன்புமணி, புளியரை கோவில் கண்காணிப்பாளர் ரத்தினவேலு ஆகியோர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News