சமையல்
காஞ்சிபுரம் இட்லி

வீட்டிலேயே செய்யலாம் காஞ்சிபுரம் இட்லி

Published On 2022-04-20 05:13 GMT   |   Update On 2022-04-20 05:13 GMT
காஞ்சிபுரம் இட்லியை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். இதில் மிளகு, சீரகம் சேர்க்கப்படுவதால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

இட்லி (புழுங்கல்) அரிசி - 1 கப்
உளுத்தம் பருப்பு - அரை கப்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சுக்கு பொடி - ஒரு சிட்டிகை
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய் (பொடி பல்லு பல்லாக நறுக்கியது) - அரை கப்
முந்திரி பருப்பு (சிறு சிறு துண்டுகளாக ஒடித்தது) - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணை - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை
உப்பு - தேவைக்கேற்றவாறு

செய்முறை:

அரிசியையும், உளுத்தம் பருப்பையும் தனித்தனியாக தண்ணீரில் 5 முதல் 6 மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் போட்டு இட்லிக்கு அரைப்பது போல் மிருதுவாக அரைத்து, உப்பு போட்டு கலந்து, இரவு முழுவதும் புளிக்க விடவும்.

மறுநாள், ஒரு சிறு வாணலியில் நெய்யை விட்டு அதில் முந்திரி பருப்பு, சுக்குப் பொடி (சுக்குப்பொடி இல்லையென்றால், சிறு இஞ்சித் துண்டைப் பொடியாக நறுக்கி சேர்க்கவும்) இரண்டையும் போட்டு, முந்திரி சிவக்கும் வரை வறுத்து மாவில் கொட்டவும்.  

அதே வாணலியில் நல்லெண்ணையை விட்டு சூடானதும் மிளகு, சீரகம் ஆகியவற்றை முழுவதாகவும், மற்றொரு டீஸ்பூன் மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாகவும் பொடித்து சேர்க்கவும்.

இத்துடன் பெருங்காயத்தூளையும் சேர்த்து ஓரிரு வினாடிகள் வறுத்து இதையும் மாவில் கொட்டவும்.

தேங்காய் துண்டுகளையும் மாவில் சேர்த்து நன்றாகக் கலந்துக் கொள்ளவும்.

இட்லி குக்கர் அல்லது இட்லி பானையை அடுப்பிலேற்றி, தேவையான தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.  

ஒரே அளவுள்ள டம்ளர்களை எடுத்து எண்ணெய் தடவி அதில் முக்கால் அளவிற்கு மாவை ஊற்றவும். இதை இட்லி குக்கர்/பானை உள்ளே வைத்து மூடி 15 முதல் 20 நிமிடங்கள் வரை வேக விட்டு எடுக்கவும்.

குக்கர் பாத்திரம் அல்லது வாயகன்ற பேசின் போன்ற பாத்திரத்தில் மாவை ஊற்றி வேக வைத்து, துண்டுகளாகவும் வெட்டி பரிமாறலாம். அல்லது சாதரண இட்லி போல், இட்லி தட்டில் ஊற்றியும் வேக வைக்கலாம்..

இப்போது சூப்பரான சத்தான காஞ்சிபுரம் இட்லி ரெடி.
Tags:    

Similar News