ஆட்டோமொபைல்

சோதனையில் சிக்கிய டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட்

Published On 2019-04-20 10:55 GMT   |   Update On 2019-04-20 10:55 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ ஹேட்ச்பேக் கார் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. #TataMotors



டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ ஹேட்ச்பேக் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அப்டேட் செய்ய இருக்கிறது. டியாகோ ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. 

மேம்பட்ட டியாகோ ஃபேஸ்லிஃப்ட் கார் 2020 ஆம் ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் டிசைன் 2.0 தளத்தில் வடிவமைக்கப்படுகிறது. புதிய 2020 டியகோ வடிவைப்பு அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலை தழுவியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் மார்ச் மாதம் நடைபெற்ற ஜெனிவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சோதனையில் சிக்கிய டியாகோ ஹேட்ச்பேக் காரின் முன்புறம் கூர்மையாகவும், மேம்பட்ட கிரில், பம்ப்பர் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது.



காரின் மற்ற பாகங்களில் அதிகளவு மாற்றம் செய்யப்படாமல், பின்புறம் தற்போதைய மாடலை போன்று காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஃபேஸ்லிஃப்ட் காரை பல்வேறு நிறங்களில் தேர்வு செய்யும் வசதி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

புதிய டியாகோ காரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1.05 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கலாம் என தெரிகிறது. டியாகோ பெட்ரோல் வேரியண்ட் மாடல் அதிகளவு விற்பனையாகி வரும் நிலையில், பி.எஸ். VI எமிஷன் விதிகள் டீசல் கார்களின் விலையை அதிகரிக்கும் என்பதால் டாடா மோட்டார்ஸ் ரெவோடார்க் என்ஜின்களை வழங்குவதை நிறுத்தலாம் என தெரிகிறது.

பெட்ரோல் என்ஜினும் பி.எஸ். VI ரகத்திற்கு மேம்படுத்தப்படும் என்றும் பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை டியாகோ அனைத்து விதிகளுக்கு உட்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

புகைப்படம் நன்றி: Carwale
Tags:    

Similar News