தொழில்நுட்பம்
விவோ

பறக்கும் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் உருவாக்கும் விவோ

Published On 2021-07-04 12:38 GMT   |   Update On 2021-07-04 12:38 GMT
விவோ நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


விவோ நிறுவனம் டிரோன் செயல்பாடுகள் கொண்ட பறக்கும் கேமரா தொழில்நுட்பத்தை ஸ்மார்ட்போனில் வழங்க திட்டமிட்டுள்ளது. பறக்கும் கேமரா கொண்ட புது ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமையை பெற விவோ விண்ணப்பித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா டிரோன் போன்று பறக்கும் திறன் கொண்டிருக்கிறது.



சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் விவோ விண்ணப்பித்து இருக்கும் புது தொழில்நுட்பம் ஜூலை 1 ஆம் தேதி வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் புகைப்படங்களும் இடம்பெற்று இருக்கின்றன. அதன்படி பறக்கும் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் தோற்றத்தில் தற்போது அனைவரும் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் போன்றே காட்சியளிக்கிறது.

ஸ்மார்ட்போனில் உள்ள புதுவிதமான கேமராவை பறக்க வைக்க நான்கு ப்ரோப்பெல்லர்கள் உள்ளன. இதற்கென தனியாக பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த கேமரா மாட்யூலில் இரண்டு கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. பரிசோதனை கட்டத்தில் உள்ள புது தொழில்நுட்பம் உண்மையில் சாத்தியமாக மேலும் சில ஆண்டுகள் ஆகும்.
Tags:    

Similar News