செய்திகள்
கொரோனா வைரஸ்

கோவை மாவட்டத்தில் 2 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

Published On 2021-06-08 09:47 GMT   |   Update On 2021-06-08 09:47 GMT
கொரோனா தொற்று காரணமாக அரசு ஆஸ்பத்திரிகள் தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்ற 4,815 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.

கோவை:

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை மற்றும் இறப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நேற்று ஒரே நாளில் 2,564 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 90 ஆயிரத்து 593 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக அரசு ஆஸ்பத்திரிகள் தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்ற 4,815 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 59 ஆயிரத்து 793 உயர்ந்துள்ளது

கொரோனா பாதிப்பு காரணமாக அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 26 பேர் சிகிச்சை பலனளிக்காமல் பலியாகினர். இதன் மூலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 1,532 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது கொரோனா தொற்று காரணமாக அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 29 ஆயிரத்து 268 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags:    

Similar News