ஆட்டோமொபைல்

இந்தியாவில் ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக் அறிமுகம்

Published On 2019-06-26 11:33 GMT   |   Update On 2019-06-26 11:33 GMT
இந்தியாவில் ஜீப் இந்தியா நிறுவனத்தின் புதிய காம்பஸ் டிரெயில்ஹாக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



ஜீப் இந்தியா நிறுவனம் காம்பஸ் டிரெயில்ஹாக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக் கார் விலை ரூ.26.8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய டிரெயில்ஹாக் கார் தான் இந்தியாவில் காம்பஸ் எஸ்.யு.வி. மாடல்களில் தற்சமயம் டாப் எண்ட் மாடலாக இருக்கிறது.

ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக் காரில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் புதிய பம்ப்பர்கள், அதிகளவு கிரவுண்ட் கிளியரன்ஸ், ஆண்டி-கிளேர் பிளாக் டீக்கல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் இருபுறமும் முற்றிலும் புதிய பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.



காரின் உள்புறம் காம்பஸ் டிரெயில்ஹாக் கார் முற்றிலும் பிளாக் நிற ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் லெதர் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. காரின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கியர் லீவர் மற்றும் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றை சுற்றி சிவப்பு நிற அக்சென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக் மாடலில் பி.எஸ். VI விதிகளுக்கு பொருந்தும் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 2.0 லிட்டர் யூனிட் போன்று 173 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 9-ஸ்பீடு AT கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் புதிய காரில் ராக் மோட் எனும் டிரைவிங் மோட் சேர்க்கப்பட்டுள்ளது. இத்துடன் 4x4 டிரைவ்டிரெயின் வழங்கப்பட்டுள்ளது. காரின் உள்புறம் 7.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஸ்டார்ட் / ஸ்டாப் வசதி, கீலெஸ் எண்ட்ரி உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News