செய்திகள்
கொள்ளை

நுங்கம்பாக்கத்தில் மத்திய அரசு அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2020-01-13 09:16 GMT   |   Update On 2020-01-13 09:16 GMT
சென்னை நுங்கம்பாக்கத்தில் மத்திய அரசு அதிகாரி வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் வசிப்பவர் கிருஷ்ணன். மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் முதுநிலை பொதுமேலாளராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 6-ந் தேதி அவர் சொந்த ஊரான திருச்சிக்கு குடும்பத்துடன் சென்று விட்டு நேற்றிரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 22 சவரன் நகை, கேமரா, ரூ.6 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடியை வாலிபர் ஒருவர் கல்வீசி உடைத்தார். இதனை கண்ட காவலாளி, அவரை பிடித்து அண்ணாசலை போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த யுவன் என்று தெரிய வந்தது. சிறிது மனநலம் பாதிக்கப்பட்டது போல் இருக்கும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெற்குன்றம் பல்லவன் நகர் பள்ளி தெருவைச் சேர்ந்தவர் முகமது நூருல்லா. இவர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வெங்காய மண்டி அருகே கறிக்கடை நடத்தி வருகிறார்.

இன்று காலை 6.30 மணி அளவில் நூருல்லா வீட்டிற்கு காரில் வந்த 4 பேர் கும்பல் வீட்டிற்குள் புகுந்து நாங்கள் வருமான வரித்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் என்று கூறினர்.

வீட்டை சோதனை செய்ய வேண்டும் என்று தெரிவித்து பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 10ஆயிரம் மற்றும் 5 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு தப்ப முயன்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நூருல்லா அவர்களை தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கி நகை-பணத்துடன் காரில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
Tags:    

Similar News