செய்திகள்
தற்கொலை முயற்சி

7-ம் வகுப்பு மாணவி தூக்க மாத்திரை தின்று தற்கொலை முயற்சி: போக்சோ சட்டத்தில் தாய்-மகன் கைது

Published On 2020-09-17 05:09 GMT   |   Update On 2020-09-17 05:09 GMT
திருச்சியில், காதல் கடிதம் கொடுத்து தொல்லை கொடுத்ததால் 7-ம் வகுப்பு மாணவி தூக்க மாத்திரை தின்று தற்கொலை முயன்றுள்ளார்.
திருச்சி:

திருச்சி செம்பட்டு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி லட்சுமி(வயது42). இந்த தம்பதியின் மகன் சிவா என்ற ராஜரத்தினம்(20). அதே பகுதியில் 7-ம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவியை, ராஜரத்தினம் காதலித்து வந்துள்ளார். அந்த மாணவியிடம், 2 முறை ராஜரத்தினம் காதல் கடிதம் கொடுத்து, உன்னை நான் காதலிக்கிறேன் என தொல்லை கொடுத்துள்ளார். அதற்கு மாணவி மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் ராஜரத்தினத்தின் தாயார், மகன் காதல் வயப்பட்டதை அறிந்து ஆத்திரம் அடைந்தார். கடந்த 14-ந்தேதி, மாணவியின் வீட்டுக்கு சென்ற அவர், ‘அறியா பருவத்தில் காதல் கேட்குதா?’ எனக்கூறி அவளை சாதிபெயரை சொல்லி திட்டி கண்டித்துள்ளார்.

இதனால், மனவேதனை அடைந்த மாணவி தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் மயங்கி கிடந்த மாணவியை, பெற்றோர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் பொன்மலை அனைத்து மகளிர் போலீசார் சிறார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் (போக்சோ) மற்றும் எஸ்.சி,எஸ்.டி. சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து, லட்சுமி மற்றும் அவரது மகன் ராஜரத்தினத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News