ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட் இல்லாதவர்கள் திருமலைக்கு வர வேண்டாம்

Published On 2020-09-12 04:56 GMT   |   Update On 2020-09-12 04:56 GMT
திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட் இல்லாதவர்கள் திருமலைக்கு வர வேண்டாம். இதை, பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 19-ந்தேதியில் இருந்து 27-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்க உள்ளது. பிரம்மோற்சவ விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, திருமலையில் உள்ள அன்னமயபவனில் திருமலை-திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை அதிகாரிகள், திருப்பதி புறநகர் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் பாதுகாப்பு அதிகாரி கோபிநாத்ஜாட்டி பேசியதாவது:-

புரட்டாசி மாத பிறப்பையொட்டி தமிழர்கள் சாமி தரிசனம் செய்ய திருமலைக்கு வருவார்கள். இந்த ஆண்டு கொரோனா பரவலால் இலவச தரிசனம் 30-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 300 ரூபாய் டிக்கெட் பக்தர்கள், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கிய பக்தர்கள், வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்கள் ஆகியோர் மட்டும் ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகளுடன் திருமலைக்கு வர வேண்டும். தரிசன டிக்கெட் இல்லாதவர்கள் திருமலைக்கு வர வேண்டாம். இதை, பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் திருப்பதி புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ரெட்டி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News