உள்ளூர் செய்திகள்
எம்.எல்.ஏ. சின்னதுரை தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

குவாரியை அகற்றக்கோரி எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியல்

Published On 2022-04-15 09:59 GMT   |   Update On 2022-04-15 09:59 GMT
புதுக்கோட்டை அருகே பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் கல் குவாரியை அகற்றக்கோரி எம்.எல்.ஏ. தலைமையில் இன்று சாலை மறியல் போராட்டம் நடந்தது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்த வத்தனாக்குறிச்சி ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாருக்கு சொந்தமான கல் குவாரி செயல்பட்டு வருகிறது. மேலும் அங்கு தார் உற்பத்தியும் செய்யப்படுகிறது.

இதிலிருந்து வெளியேறும் நச்சுக்கழிவுகளால் அப்பகுதியில் காற்று மாசுபடுவதோடு, கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகி வருவதாகவும், அவர்களுக்கு ஒருவித காச நோய் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும், அதிகாரிகளுக்கும் பல்வேறு புகார் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால்  ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.  

அதன்படி இன்று காலை கீரனூர் அருகே வத்தனாக்குறிச்சி பகுதியில் திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் கந்தர்வக்கோட்டை தொகுதி கம்யூனிஸ்டு கட்சி சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் திருச்சி-புதுக்கோட்டை மற்றும் ராமேசுவரம்&சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையே மறியல் நடந்த இடத்துக்கு வந்த குளத்தூர் தாசில்தார் பெரியநாயகி சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.    

ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத போராட்டக்காரர்கள் கலெக்டர் வந்து எழுத்துப்பூர்வமாக தந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று உறுதியாக கூறியதால் மறியல் தொடர்ந்து நடைபெற்றது.

Tags:    

Similar News