பொது மருத்துவம்
வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்.. பிஞ்சு வெள்ளரிக்காய்..

Published On 2022-02-13 02:30 GMT   |   Update On 2022-02-12 08:03 GMT
நீரிழிவு நோயாளிகளும் வெள்ளரிக்காயை உட்கொள்ளலாம். இது ரத்தத்தில் சர்க்கரை அளவை எதிர்மறையாக பாதிக்காது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
வெள்ளரிக்காயில் 96 சதவீதம் நீர்ச்சத்துள்ளது. கொழுப்பு இல்லை. நார்ச்சத்து, புரதம், வைட்டமின் சி, கே, பொட்டாசியம் உள்பட ஏராளமான சத்துக்களும் இருக்கின்றன. வெள்ளரிக்காய் உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதோடு சரும ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். பசியை போக்கும். இதனை மதியம் மற்றும் இரவு உணவோடு சாலட்டாகவும் சாப்பிடலாம்.

வெள்ளரிக்காயில் இருக்கும் விசேஷ பலன்கள்:

வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவாகவே இருக்கும். கொழுப்பும் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தாராளமாக சாப்பிடலாம். சாலட்டுகளாகவும் தயாரித்து ருசிக்கலாம். வெள்ளரிக்காயை அதிகமாக சாப்பிட்டாலும், குறைவான கலோரியே உடலில் சேரும்.

உடல் இயக்கம் தொய்வில்லாமல் நடைபெறுவதற்கு போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியமானது. உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளியேறும்போது ஏற்படும் நீரிழப்பை ஈடுகட்ட வேண்டியது முக்கியமானது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பதோடு நீர்ச்சத்து கொண்ட காய்கறிகள், பழங்களை சாப்பிட வேண்டும். அதற்கு வெள்ளரிக்காய் மிகவும் ஏற்றது.

வெள்ளரிக்காய் இதய ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. இதய நோய்களுக்கான காரணியாக இருக்கும் கொழுப்பை நிர்வகிப்பதற்கு வெள்ளரிக்காயில் இருக்கும் நார்ச்சத்து உதவும். அதில் சோடியமும் குறைவாகவே இருக்கும். உணவில் வெள்ளரிக்காயைச் சேர்ப்பது இதய நோய் அபாயத்தை கட்டுப்படுத்தும்.

நீரிழிவு நோயாளிகளும் வெள்ளரிக்காயை உட்கொள்ளலாம். இது ரத்தத்தில் சர்க்கரை அளவை எதிர்மறையாக பாதிக்காது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நீரிழிவு சார்ந்த ஆபத்தை கட்டுப்படுத்த உதவும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கவும் உதவும்.
Tags:    

Similar News