செய்திகள்
கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற எஸ்.பி., சசாங்சாய் மற்றும் தலைமை ஆசிரியர்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் - கலெக்டர் உத்தரவு

Published On 2021-11-23 10:01 GMT   |   Update On 2021-11-23 10:01 GMT
பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையிலான போக்சோ-2012 சட்டம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வினீத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் நிகழ்ந்தால் உடனடியாக காவல்துறைக்கு அச்சமில்லாமல் தகவல் தெரிவிக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அதனை மறைக்க கூடாது. 

அதேபோல் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி மற்றும் புகார் தெரிவிப்பதற்கான தொடர்பு எண்களை அச்சிட வேண்டும், விசாகாகமிட்டி அமைக்கப்படாத பள்ளிகளில் உடனடியாக அவற்றை அமைத்திட வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
Tags:    

Similar News