ஆட்டோமொபைல்
பிகாஸ் ஏ2

இரண்டு பிகாஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்

Published On 2020-07-18 11:31 GMT   |   Update On 2020-07-18 11:31 GMT
பிகாஸ் நிறுவனத்தின் இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான பிகாஸ் இந்திய சந்தையில் இரண்டு புதிய ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்து உள்ளது. 

பிகாஸ் ஏ2 மற்றும் பி8 என அழைக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முறையே இரண்டு மற்றும் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. தற்சமயம் இவை சென்னை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் பன்வெல் போன்ற பகுதிகளில் கிடைக்கிறது. 



இந்தியாவில் பிகாஸ் ஏ2 லீட் ஆசிட் மாடல் விலை ரூ. 52499, ஏ2 லித்தியம் அயன் மாடல் விலை ரூ. 67999, பி8 லீட் ஆசிட் மாடல் விலை ரூ. 62999, பி8 லித்தியம் அயன் மாடல் விலை ரூ. 82999 என்றும் பி8 எல்ஐ தொழில்நுட்பம் கொண்ட மாடல் விலை ரூ. 88999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

பிகாஸ் ஏ2 ஸ்கூட்டர் என்ட்ரி லெவல் மாடல் ஆகும், இது மணிக்கு அதிகபட்சம் 25 கிலோமீட்டர் வேகத்திலும், ஒருமுறை சார்ஜ் செய்தால் 110 கிலோமீட்டர் வரை செல்லும். லீட் ஆசிட் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆக ஏழு முதல் எட்டு மணி நேரங்கள் ஆகும். லித்தியம் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆக 2 மணி 15 நிமிடங்கள் ஆகும். 

பிகாஸ் பி8 பிரீமியம் மாடல் ஆகும். இது மணிக்கு அதிகபட்சம் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 70 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். 
Tags:    

Similar News