உள்ளூர் செய்திகள்
பலியானசெல்வத்தின் மனைவி, குழந்தைகள்

இனிமேல் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவேன்?

Published On 2022-04-17 10:22 GMT   |   Update On 2022-04-17 10:22 GMT
இனிமேல் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவேன்? என பலியான செல்வத்தின் மனைவி கதறினார்.
மதுரை

மதுரை சித்திரை திருவிழாவில் நேற்று கள்ளழகர்  வைகை ஆற்றில் இறங்கினார். அழகரை பார்க்க ஒரே நேரத்தில் பலரும் ஒடியதால் நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பலியான செல்வம், டெய் லராக வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்தார். 

அவரது மறைவால் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அவரது மனைவி சந்திரா கணவர் இறந்ததால் கண்ணீர் விட்டு கதறினார். அவர் கூறியதாவது:

எனது கணவர் கோகிலாபுரத்தில் தையல்கடை நடத்தி வந்தார். அந்த வருமானத்தில்தான் நானும் என் குழந்தைகளும் வாழ்ந்து வந்தோம். இந்த நிலையில் அவர் எதிர்பாராத விதமாக இறந்து விட்டார். இதன் காரணமாக எங்கள் குடும்பமே நிலை குலைந்து போய் உள்ளது. என் குழந்தைகளை காப்பாற்ற என்ன செய்யப்போகிறேன் என தெரியவில்லை. 

இவ்வாறு அவர் கூறினார்.

செல்வத்தின் மகள் ஹர்சினி 10-ம் வகுப்பும், மகன் சுபிக்ஷன் 1-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.செல்வத்தின் உறவினர் கூறியதாவது:

அரசு அறிவித்து உள்ள இழப்பீட்டுத் தொகை ஆறுதல் அளிக்கிறது. இருந்த போதிலும் 2 குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, சந்திராவுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அப்போதுதான் அவரால் குழந்தைகளை காப்பாற்ற முடியும்.  எனவே முதல்வர் மு.க. ஸ்டாலின் எங்களின் கோரிக்கையை கருணையோடு பரிசீலிக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News