ஆன்மிகம்
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம்

Published On 2020-08-17 08:26 GMT   |   Update On 2020-08-17 08:26 GMT
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பால், தயிர், எண்ணெய் மற்றும் மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நறுமண பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி தங்க கவச அலங்காரத்தில் ஜொலித்தார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கடந்த 3½ மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு உள்ளது. இங்கு தினசரி சாமிக்கு பூஜை நடத்தப்பட்டு வந்தாலும், பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை.

இந்த நிலையில் நேற்று ஆடி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சாமிக்கு பால், தயிர், எண்ணெய் மற்றும் மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நறுமண பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி தங்க கவச அலங்காரத்தில் ஜொலித்தார். இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்றபடி சாமியை தரிசனம் செய்தனர். 
Tags:    

Similar News