ஆன்மிகம்
சிறப்பு அலங்காரத்தில் அகஸ்தீஸ்வரர்

நாகை அகஸ்தீஸ்வரர் கோவிலில் மாசித்திருவிழா தொடங்கியது

Published On 2021-02-19 07:21 GMT   |   Update On 2021-02-19 07:21 GMT
நாகை அகஸ்தீஸ்வரர் கோவில் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகை வெளிப்பாளையத்தில் அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அகஸ்தீஸ்வரர்-ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து கோவில் பிரகாரத்தை சுற்றி கொடி ஊர்வலம் நடந்தது. இதையடுத்து கொடிமரத்திற்கு பால், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, செயல் அலுவலர்கள் சண்முகராஜ், பூமிநாதன், சிவக்குமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News