செய்திகள்
கோப்புபடம்

தியாகதுருகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருக்கும் போராட்டம்

Published On 2021-09-08 10:10 GMT   |   Update On 2021-09-08 10:10 GMT
தேசிய ஊரக வேலைவாய்ப்பு அட்டையை அனைவருக்கும் வழங்க வேண்டும், தொடர்ச்சியாக 100 நாட்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டாச்சிமங்கலம்:

தியாகதுருகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணை தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார். மாவட்ட முன்னாள் தலைவர் சுப்பிரமணி, மாவட்ட துணைத்தலைவர் வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுநாகலூர் கிளைத் தலைவர் வைத்திலிங்கம் வரவேற்றார். 

மாவட்ட பொருளாளர் சாந்தி, துணை செயலாளர் அஞ்சலை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கப்பட்ட தேசிய ஊரக வேலைவாய்ப்பு அட்டையை அனைவருக்கும் வழங்க வேண்டும், தொடர்ச்சியாக 100 நாட்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் சிறுநாகலூர், நின்னையூர், கொங்கராயபாளையம், உச்சிமேடு, வரஞ்சரம், குடியநல்லூர், கொட்டையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

இதை அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்முருகன், இந்திராணி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தனர். இதை ஏற்று மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News