தொழில்நுட்பம்
சாம்சங்

கேலக்ஸி நோட் சீரிஸ் பற்றிய உண்மையை வெளிப்படுத்திய சாம்சங்

Published On 2020-12-17 08:29 GMT   |   Update On 2020-12-17 08:29 GMT
கேலக்ஸி நோட் சீரிஸ் மாடல்களின் எதிர்காலம் பற்றிய உண்மையை சாம்சங் நிறுவனம் வெளிப்படுத்தி இருக்கிறது.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யாது என சமீபத்தில் பலமுறை தகவல்கள் வெளியாகின. மேலும் நோட் சீரிஸ் மாடல்களில் பிரபல அம்சமான எஸ் பென் கேலக்ஸி எஸ்20 சீரிசில் வழங்கப்படலாம் என்றும் கூறப்பட்டன.

இந்நிலையில், சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் சீரிஸ் பற்றி வெளியான தகவல்களை முற்றிலும் மறுத்துள்ளது. அடுத்த ஆண்டு கேலக்ஸி நோட் 20 சீரிஸ் மாடலின் மேம்பட்ட ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு வெளியிடப்படும் என்றும் சாம்சங் நிறுவனம் தெரிவித்து இறுக்கிறது. 

முன்னதாக சாம்சங் மொபைல் பிரிவு தலைவர் ரோ டே மூன், எஸ் பென் ஸ்டைலஸ் அனுபவத்தை மேலும் சில கேலக்ஸி சாதனங்களில் வழங்க முடிவு செய்து இருப்பதாக தெரிவித்தார். கேலக்ஸி நோட் சீரிஸ் அம்சங்களில் அதிகம் விரும்பப்பட்ட சிலவற்றை மேலும் அதிக கேலக்ஸி சாதனங்களில் வழங்க இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அந்த வகையில் இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் எஸ் பென் ஸ்டைலஸ் கேலக்ஸி எஸ்21 சீரிசில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கேலக்ஸி எஸ்21 சீரிஸ் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

Tags:    

Similar News