உள்ளூர் செய்திகள்
கூட்டத்தில் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் பேசிய காட்சி.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க. நிர்வாகிகள் வெற்றி பெற வேண்டும்-அய்யாத்துரை பாண்டியன் பேச்சு

Published On 2022-01-20 09:12 GMT   |   Update On 2022-01-20 09:12 GMT
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க. நிர்வாகிகள் வெற்றி பெற வேண்டும் என சங்கரன்கோவிலில் நடந்த அ.ம.மு.க. ஆலோசனை கூட்டத்தில், வடக்கு மாவட்ட செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் பேசினார்.
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விருப்ப மனு குறித்த பரிசீலனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அய்யாத்துரைபாண்டியன் தலைமை தாங்கி பேசினார். 

அப்போது, நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு சீட்டு முறை நடை முறையில் இருந்ததால் ஏகப்பட்ட குளறுபடி நடந்தது. 

ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு மிஷினில் தான் ஓட்டு போட வேண்டும். அதனால் பெரிய அளவில் குளறுபடி இருக்க வாய்ப்பு இல்லை என்று நினைக்கிறேன். 

ஆனால் ஓட்டு எண்ணிக்கையின்போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர் ஆகிய 3 சட்டசபை தொகுதிகள் நமது மாவட்டத் தில் உள்ளன. 

மூன்று தொகுதிகளுக்கும் தனித்தனியாக குழுக்கள் அமைக் கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வை விட ஒருபடி அதிகமாக அ.ம.மு.க., தொண்டர்கள் பணியாற்ற வேண்டும். கட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற கடமை இருக்கிறது. 

இவ்வாறு அய்யாத்துரை பாண்டியன் பேசினார்.
Tags:    

Similar News